பொண்ணு யாரு சொல்லு மச்சான்
பொண்ணு யாரு சொல்லு மச்சான்
ஊருக்கு
மறச்சு வெச்சு
உனக்குள்ள
ஒளிச்சு வச்சு
யாருக்கும்
தெரியாம
சித்திரமா
எழுதி வச்சு
மனசுக்குள்
கோயில் கட்டி
பத்திரமா
வச்சிருக்கும்
பொண்ணு யாரு
சொல்லு மச்சான்
பாவாடை
சட்டையோடு
படியாத
தலையோடு
எண்ணயத்தான்
காணாத
இத்துனூண்டு
தலைக்குள்ள
உன்னையத்தான்
வெச்சிருந்த
பொண்ணு யாரு
சொல்லு மச்சான்
யாருக்கும்
தெரியாம
ஒளிச்சு வச்சி
பாத்திருந்து
ராவெல்லாம்
தூங்காம
காவலெல்லாம்
காத்திருந்து
பொத்தி வச்ச
மயிலறக
நீ வந்து
கேட்டதுமே
தந்துவிட்ட
பொண்ணு யாரு
சொல்லு மச்சான்
காரணமே
இல்லாம
அடிக்கடி
சிரிச்சு வெச்சு
காத தூரம்
போனதுமே
திரும்பி உன்ன
பாக்க வெச்ச
பொண்ணு யாரு
சொல்லு மச்சான்
வாய்க்கா
வரப்பெல்லாம்
உங்க கத
சொல்லுதிங்க
புங்க மர
நிழலுங்கூட
தெரிஞ்சிருக்கும்
அந்த கத
புத்தி கெட்ட
சிறுக்கி இவ
கேக்குறப்ப
சொல்லு மச்சான்
யாருக்கோ
வாக்கப்பட்டு
எங்கேயோ
உள்ள அவ
ஊருக்கே
தெரிஞ்சு உன்ன
கைப் பிடிச்ச
என்ன விட
எப்படித் தான்
உசத்தியின்னு
இப்ப நீயும்
சொல்லு மச்சான்
புத்தி கெட்ட
சிறுக்கி இவ
பேச்சுல தான்
தப்பிருந்தா
புரிஞ்சிகிட்ட
புருசன் நீ
பக்குவமா
சொல்லு மச்சான்
உன் மனசுக்குள்ள
என்ன விட
யாருக்கும்
எடமுமில்ல
யாரேனும்
உள்ளிருந்தா
தூக்கிப் போட்டு
மிதிப்பேனுல்ல
அதனால
நெனச்சவள
மணமுடிச்சு
நெனச்சதெல்லாம்
அடஞ்ச இந்த
ராசாவின்
நெஞ்சுக்குள்ள
குடியிருக்கும்
ராசாத்தி
பொண்ணு
நான் தான்
சின்ன மச்சான்
கருத்துகள்
கருத்துரையிடுக