தமிழும் தென்றலும்

செந்தமிழ்

ஊரிலே

தென்றலின் உலா

கவிதைத் தெருவினை

கடந்து

போகையில்

கற்பனைத் தோரணம்

ஆயிரம்

கண்டது

எழுத்துக் கற்களால்

கவிதை

வீடுகள்

கொத்தனார்

வரிசையில்

இவனும் ஒருவன்

வசிப்பவர் எல்லாம்

ரசிப்பவர் ஆயினும்

தென்றலை

யாரும்

தீண்டவும் இல்லை - அதனால்

தமிழுக்கும் கூட

கர்வம் வந்தது

முடிந்தால்

என்னை

வென்றிடு என்றது.

தென்றலும்

தொண்டையை

சொருமிக்

கொண்டு

தமிழே 

நீயும் ஓர்

தென்றல் தான் என்றே

முதல்வரி தமிழில்

சொல்லி

முடிக்கவும்

தமிழும்

தென்றலும்

நகைத்துக் கொண்டன

தென்றலும்

தெருவின்

அங்கம் ஆனது


கருத்துகள்