வேடங்கள்

என்னை

யாரென்று

எண்ணிப் 

பார்க்கிறேன்


தாயாய்

மகளாய்

தாரமாய்

தங்கையாய்

தோழியாய்

காதலியாய்

மன்னிக்க

முடியாத

எதிரியாய்

எத்தனையோ

வேடங்கள்.


பெண்ணென

பிறந்திடல்

வரமா

சாபமா

எதுவும்

தெரியாமல்

எத்தனையோ

எதிர்வினை


ஆணுக்கும்

பெண்ணுக்கும்

அடிப்படை

பேதங்கள்

உடலில் தான்

என்றாலும்

எதிர்கொள்ளும்

பார்வையில்

எத்தனை

பேதங்கள்


எனக்கென

வாழாமல்

பிறர்க்கென

வாழ்ந்தே

பாதிப்பிறவி

பயனற்றுப் போனது


என்றேனும் ஒரு நாள்

நான்

இறந்து போனதும்

மண்ணோடு மண்ணாய்

மறைந்திடும்

திறமைகள்

நான்

உயிரோடு இருக்கையில்

கொன்றிடும்

அனுதினம்


ஆனாலும்

உங்களுக்கு

அதுவெல்லாம்

தெரியாது

சொல்வதற்கு

உங்களிடம்

எத்தனையோ

குறைகள்

கருத்துகள்