விமர்சனம்

எனக்கு

யார் மீதும்

விமர்சனம்

இல்லை

என்னை

யாரேனும்

விமர்சித்தால்

தவறில்லை


என்னைப் பற்றி

நினைப்பதை எல்லாம்

காகிதத்தில் எழுதி

கையொப்பமிடுங்கள் - பின்

பெயரை மட்டும்

மாற்றிடுங்கள்

எனக்குப் பதில்

உங்கள் பெயர்

மீண்டும்

படித்துப் பாருங்கள்

இதுதான் உண்மை

இதுதான் வாழ்க்கை


என் வரிகளுக்குப்

பின்னால்

வலிகளும் வாழ்க்கையும்

அதனால் தான்

என்னால்

எழுதவே முடிகிறது

கருத்துகள்