துன்பம்

இன்ப துன்பமென்று 

எண்ணி இருப்பதெல்லாம்

மனதின் மாயங்களே

மனிதர்களே உணருங்கள்

இருப்பதை விட்டு விட்டு

பறப்பதற்கு ஆசைப்பட்டால்

வருத்தமே மிஞ்சு மென்று

உணர்கையில் துன்பமில்லை

இருப்பினும் துன்ப விதை

உனக்குள் நீ விதைக்கையிலே

நானென்ன செய்வது

நகைப்பதைத் தவிர

நண்பனே சொல்கிறேன் கேள்

துன்பமென்று உள்ளதெல்லாம்

துச்சமாய் நீ எண்ணி

துணிந்துநின்று நகைக்கையிலே

தூரமாய்ப் போய் விடும்

நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்

சந்தேகம் இல்லையப்பா

கருத்துகள்