நான்
ஆட்டம் போடுவேன்
பாட்டு பாடுவேன்
கூட்டம் கூட்டுவேன்
கோட்டை தாண்டுவேன்
நாட்டை வெல்லுவேன்
கூட்டில் வாழுவேன்
வேட்டை ஆடுவேன்
கோட்டை ஆளுவேன்
அன்பை அள்ளுவேன்
பண்பை வெல்லுவேன்
அம்பு கொண்டுநான்
வம்பை வெல்லுவேன்
துன்பம் கண்டுநான்
இன்பம் கொள்ளுவேன்
நண்பன் கொண்டுநான்
அண்டம் வெல்லுவேன்
தோல்வி கண்டு நான்
வேள்வியாகின்றேன்
கேள்வி கொண்டுநான்
தோல்வி வெல்கிறேன்
எண்ணம் கொண்டுநான்
மண்ணை வெல்லுவேன்
என்னை வென்று நான்
விண்ணில் நில்லுவேன்
எந்த ஊரிலும்
பந்தம் கொள்ளுவேன்
சொந்த ஊரிலே
சொர்க்கம் கொள்ளுவேன்
அகத்தூய்மையால்
சுகம் கொள்ளுவேன்
சுகம் கொண்டுநான்
அகம் வெல்லுவேன்
சிறிய மனிதனின்
குறையை போக்கி நான்
பெரிய மனிதனாய்
உயரச்செய்யுவேன்
பெரிய மனிதரும்
சிறிய மனிதராய்
தெரியும் அளவு தான்
பெரிய மனிதன் நான்
கருத்துகள்
கருத்துரையிடுக