வந்துவிடு வெண்ணிலவே
பட்டுவண்ண ஆடைகட்டி
எட்டிநிற்கும் வட்டநிலா
தொட்டுவிடத் துடிக்கின்றேன்
கிட்டவந்து நில்லுநிலா
பொட்டுவைத்து பூமுடித்து
வித்தைகாட்டும் வெள்ளிநிலா
விட்டுவிட்டு விலகிநிற்க
விரும்பலாமோ சொல்லுநிலா
கட்டிவைத்த தாரென்று
சுட்டிவிடு சின்னநிலா
கட்டவழிக்க நானிருக்கேன்
கிட்டவந்து நில்லுநிலா
ஊருக்குத் தெரியாமல்
வந்துவிடு வண்ணநிலா
யாருக்கும் தெரியாமல்
திரும்பிடலாம் சின்னநிலா
கருத்துகள்
கருத்துரையிடுக