பசி

பசித்தபின் புசியென்னும்

மனிதர்களே கேளுங்கள்

பசித்தாலும் புசிப்பதற்கு

உணவெங்கே சொல்லுங்கள்


ருசிகண்டு உணவருந்தும்

மனிதர்களே சொல்லுங்கள்

ருசியின்றிப் பசிவெல்லும்

உணவிங்கே தாருங்கள்


உணவெல்லாம் வீணாக்கும்

மனிதர்களே நில்லுங்கள்

ஒருவேளை உணவின்றி

வாழ்பவரை காணுங்கள்


இலக்கோடு வாழ்கின்ற

மனிதர்களே கேளுங்கள் - எம்

இலக்கெல்லாம் ஒருவேளை

உணவேதான் பாருங்கள்


பசியென்றால்  என்னவென

உணர்ந்துகொள்ளப்  பாருங்கள்

பசிவெல்லும் வழியேதும்

இருந்தாலும் கூறுங்கள்


உதவும் கரங்களிடம்

எம்கதையை கேளுங்கள்

இரவெல்லாம் உறங்காத

எம்சோகம் பாருங்கள்


உதவும் கரங்களுக்கு

ஒத்துழைப்பு தாருங்கள்

உதவாமல் போனாலும்

இகழாமல் பாருங்கள்


உதவுகின்ற கரங்களே

ஓர்நிமிடம் நில்லுங்கள்

உயிர்காக்கும் உமக்காக

விழியோரம் நீர்த்துளிகள்

கருத்துகள்