மழை

வான்முகில் வந்திட 

மயில்கள் ஆடிட

வான வீதியில் 

மேக ஊர்வலம்

கண்ணில் நீருடன் 

என்ன காரணம்

கடலில் நீரென 

மேகப் பெண்ணுமே

பூமிப் பந்துடன்  

காதல் கொண்டது

வான ராட்சசன் 

கவர்ந்து போனதும்

கண்ணில் நீரென 

பூமி வந்தது

பூமிப் பந்துடன் 

இணைந்து போனது

கடலில் நீரென 

கரைந்து போனது

மொத்த பூமியும் 

குளிர்ந்து போனது


கருத்துகள்