வீரம்
( ராணுவ வீரன் முன் பத்திரிக்கையாளன்)
ஆயுதம் ஏந்துகின்ற
வீரரையும் படம்பிடிக்கும்
என் வீரம்
ஒன்று தான்
வரலாற்றில்
இடம்பிடிக்கும்
உன் வீரம்
உயிரெடுத்தால்
என் வீரம்
அதைத்தடுக்கும்
வரலாறு
என்றைக்கும்
எனக்குத் தான்
மதிப்பளிக்கும்
சுடுகின்ற
உனக்குள்ளே
எரிகின்ற
நெருப்பு - அதை
அனைக்கத் தான்
படம் பிடித்தேன்
அதுவே என்
சிறப்பு
உலகெங்கும்
மனதுக்குள்
மனிதம்
மலர்ந்துவிட்டால்
எல்லைகள்
என்பதல்லாம்
எடுபடாமல்
போய்விடும்
கருத்துகள்
கருத்துரையிடுக