மழைக் காலக் காதல் ஒன்று
மழைபொழியும் மாலைப்
பொழுதினிலே ஓர்நாள்
கடற்கரையில் நானும்
அவளோடு தனித்திருந்தேன்
இடியோடு மின்னல்கூடி
படிப்படியாய் வேகம்கூட்டி
மழைபொழியக் கண்டோம்
உயிர்நனைய நின்றோம்
மழையோடு மணலும்காண
மழலைபோல் சிரித்துப் பேசி
இருளோடு ஒன்றினைந்து
கடலோடு கண்ணாமூச்சி
ஆடிப்பாடி மகிழ்ந்தோம்
கூடிக்குலவிக் கிடந்தோம்
ஒரிரு திங்கள்பின்னே
இருவரும் ஒன்றுகூடி
மணவறையில் இணைந்தோம்
ஆனாலும் நெஞ்சினுள்ளே
மறவாமல் என்றும் உண்டு
மழைக்காலக்காதல் ஒன்று
கருத்துகள்
கருத்துரையிடுக