எத்தனை இன்பம்
எண்ணிப் பார்க்கையில்
எத்தனை இன்பம்
ஏற்றம் இறைத்து
ஏர்கொண் டுழுது
நாற்று நட்டு
நடவு செய்து
வாழ்ந்த வாழ்க்கையே
வாழ்வின் இன்பம்
ஒருவருக்கொருவர்
துணையாய் நின்று
சிரித்துப் பேசி
சிந்தனையின்றி
கடுஞ் சுமையோடு
நெடும் பகல் உழைத்துப்
படுக்கப் போகையில்
சகலமும் இன்பம்
அத்தை மகனும்
மாமன் மகளும்
அன்பு கொண்டு
அனுதினம் கூடி
காதல் மொழிகள்
பலப்பல பேசி
கழித்த நாட்கள்
காதலின் இன்பம்
காளை மாடுகள்
வண்டியில் பூட்டி
விரட்டி விரட்டி
வேகம் கூட்டி
விண்ணில் பறந்து
மகிழ்ந்த நாட்கள்
திரும்பி வராமல்
தீர்ந்த இன்பம்
இத்தனை இன்பம்
மொத்தமாய்த் தந்த
ஒவியம் இன்பம்
ஓவியம் தந்த
ஒளியும் இன்பம்
வாழ்வும் இன்பம்
ஒவியம் ஒளியாய்
மாறுதல் இன்பம்
கருத்துகள்
கருத்துரையிடுக