சிற்பம்
என்னைச் செதுக்கி
சிற்பம் செய்தேன்
வலிகள் பலவும்
பொறுத்துக் கொண்டேன்
அல்லது என்னில்
கழிந்தது போக
நின்ற சிற்பம்
நிறைவாய் ஆனது
உன்னிலும் சிற்பம்
ஒளிந்து கிடக்குது
தடைபல உடைக்கையில்
தென்படும் அதுவாய்
உடைக்கையில் கிடைப்பது
சிற்பமும் அன்று
அதுவே வாழ்வின்
காய கற்பமாம்
கருத்துகள்
கருத்துரையிடுக