நீ வருவாயென
கனவாயவள் நுழைந்தாலதில்
விழியாலதை மொழிந்தாளென
துயிராயவள் இணைந்தானபின்
எனதாயவள் இருந்தாள்
தொலைவாய் நானிருந்தேனவள்
நினைவாலெனை மறந்தேனவள்
விரைவாயெனை அடைவாயுடன்
வருவாயென மொழிந்தாள்
நீ வருவாயென இருந்தேனென
உரைத்தாள் விழிநனைத்தாளெனில்
உடனேயதை உணர்ந்தானபின்
விரைந்தே ஊரடைந்தேன்
விழியாலெனை அளந்தாளவள்
உடலாலவள் நெளிந்தானபின்
மனாதளவள் மகிழ்ந்தாளென
தாருயர் மனையாள்
கருத்துகள்
கருத்துரையிடுக