குப்பைக் கவிதைகள்

கவிதை

எனச்சொல்லி - நீ

எழுதுவதெல்லாம்

கவிதையல்ல

குப்பையென்று

சிலபேர்

என்னிடம்

சிரித்தபடி

சொன்னார்கள்


ஆகா அற்புதம்

எனச்சொல்லி

நன்றி சொன்னேன்

அவர்களிடம்

என்னவெனப்

புரியாமல்

முழித்தார்கள்

மறுபடியும்

என்னை

பழித்தார்கள்


உங்கள்

விமர்சனங்கள்

என்னை

ஊக்குவிக்கும்

என்றால்

வரவேற்கும்

முதல் மனிதன்

நானாயிருப்பேன்


நான்

எழுதுவதை

தடுத்திடத்தான்

விமர்சனம்

செய்வதெனில்

புறந்தள்ளிப்

போவேன்

அதிலென்ன

கரிசனம்


தமிழெனக்கு

தாய் மொழியோ

தந்தை மொழியோ

அல்லவெனி்னும்

என்னை

வென்ற மொழி

அறிவைத்

தந்த மொழி


அந்த மொழி

என்னுள்ளே

தந்த மொழிப்

புலமையிலே

எழுதுகிறேன்

நாளும்

அந்தப் புகழ்

என்னையல்ல

என் தமிழைச்

சாரும்


என்றேனும்

ஒர் நாள்

நான் எழுதுவதாலே

தனக்கிழுக்கு

வந்ததென்று

தமிழ் மொழியும்

சொல்லட்டும்

அதுவரையில்

நானும்

அலுக்காமல்

எழுதிடுவேன்

என் வரிகளிலே

என்னுள்ளே

இருப்பதை நான்

பதிவிடுவேன்








கருத்துகள்