வேரோடியக் காதல்

விதையானது மண்ணில் 

விழுந்தாலது முளைக்க

வாய்ப்பானது கிடைக்கும்

அதுபோன்றது காதல்

உறவாயது நிலைக்க

வழியானது பிறக்க

முயன்றாலது முடியும்

இலையேலது மடியும்

கனவாயது இருந்தால்

கனவானதை கொணர்ந்தால்

அவளானவள் மகிழ்வாள்

உடனேயவள் இணைவாள்

உடலாலதை அறிந்தால்

உடனேயதை உணர்ந்தால்

நெடுநாளதை தொடர

வழிகாணுதல் அரி்தாம்

விதையிலது தொடங்கும்

நெடுநாளது நிற்கும்

அதன்பேரெது வென்றால்

வேரோடியக் காதல்

மலிவானது அல்ல

விலைபோவது மல்ல

நினைவோடதை கொண்டால்

உடனேயதை அடைவாய்

கருத்துகள்