மோகனப் புன்னகை
உன்
விழிக்குளத்தில்
நான்
எனைத் தொலைத்தேன்
நீ
உருக்குலைத்து
என்னை
அலைக்கழித்தாய்
உன்
உதட்டசைவில்
நான்
உணர்விழந்தேன்
நீ
பதற்றமின்றி
என்னை
பருகிவிட்டாய்
உன்
கூந்தலுக்குள்
நான்
விரல் கொடுத்தேன்
உன்
கூச்சத்தினால்
என்னை
குளிர வைத்தாய்
உன்
பெண்மையின்
மென்மையை
அனுபவித்தேன்
அதைக்
கொண்டு நீ
என்னை
வென்று விட்டாய்
நீ
மோகனப்
புன்னகை
பரிசளித்தாய்
அதில்
மொத்தமாய்
நானும்
தொலைந்து போனேன்
கருத்துகள்
கருத்துரையிடுக