அதிகாலைப் பயணம்
அதிகாலைப்
பயணத்தில்
உனை நானும்
சந்தித்தேன்
அழகாலே
மதி மயங்கி
சில நிமிடம்
நின்றிட்டேன்
அதன் பின்னர்
உனைத் தேடி
தினந்தோறும்
வந்தேன்
நீ தந்த
அமுதத்தை
அன்போடு
தின்றேன்
பல நேரம்
அழகாலே
தாலாட்டினாய்
சில நேரம்
ஏனென்னை
ஏமாற்றினாய்?
அதனாலே
எனக்குள்ளே
சில நேரம்
வருத்தம்
உனைக் காணல்
பல பேரின்
கண்களையும்
உறுத்தும்
இருந்தாலும்
இதற்கெல்லாம்
வருந்துபவன்
நானல்ல
உனைக் காணும்
பொழுதெல்லாம்
எனக்கென்றும்
வீனல்ல
உனைக் காணும்
நாளெல்லாம்
எனக்கென்றும்
வரமாகும்
இதுவன்றோ
இப்புவியில்
நான் செய்யும்
தவமாகும்
எனக்காக
தினந்தோறும்
உனைக் காட்டிக்
கொள்ளும்
வைகறை
மேகமுந்தன்
வடிவென்னைக்
கொல்லும்
கருத்துகள்
கருத்துரையிடுக